கேள்விக்குறி வடிவம் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம் இதுவும் ஒரு தாரை வடிவம் என்பது பலருக்கு தெரியாது.
உண்மையில் இந்த கேள்விக்குறி வடிவம் உருவானது எவ்வாறு எனில் நமக்கு கேள்வி எப்பொழுதெல்லாம் தோன்றும் என்பதை ஆய்வு செய்தாலே தெரிந்து விடும். ஒருவர் ஒரு வாக்கியத்தை தெளிவில்லாமல் கூறும்போதும் அல்லது சந்தேகம் ஏற்படும் வாக்கியத்தை கூறும்போதும் நாம் நமது காது மடலை அவர் அருகே கொண்டு சென்று என்ன அர்த்தம் என்றோ அல்லது திரும்பவும் கூறுங்கள் என்றோ கேட்பது உண்டு. அவ்வாறு காது மடல்களை நாம் கேள்வி கேட்க உபயோகப்படுத்துவதால் காது மடல்களைப் போலவே கேள்விக்குறியானது காட்சியளிக்கும். இதுவே கேள்விக்குறி என்ற வடிவம் உருவானதற்கான பின்புலம் ஆகும்.
27 நட்சத்திரங்களில் ஶ்ரவன நட்சத்திரம் என்று அழைக்கப்படும் திருவோண நட்சத்திரத்தின் வடிவம் காது மடல் ஆகும். திருவோண நட்சத்திரத்திற்கு சோணை என்ற பெயர் தமிழில் உண்டு. சோணை எனில் காதுமடல் என்று அர்த்தம். வாமன அவதாரத்தில் கூட மஹாபலி வாமனின் கோரிக்கையை காதுகளில் ரகசியமாக கேட்பது போல அமைந்த புராணமும் இதையே உருவகப்படுத்துகிறது.
இந்த காது மடல் வடிவத்தை அல்லது கேள்விக்குறி வடிவத்தை திருவோணம், அஸ்தம் மற்றும் ரோகிணி நட்சத்திர நபர்கள் உபயோகித்து பலன் பெறலாம்.
சித்திரை, மிருகசீரிடம் மற்றும் அவிட்டம் நட்சத்திர நபர்கள் உபயோகித்து புகழ் பெறலாம்.
விசாகம், புனர்பூசம் மற்றும் பூராட்டாதி நட்சத்திர நபர்கள் உபயோகித்து காரிய சித்தி பெறலாம்.
ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திர நபர்கள் உபயோகித்து சிக்கல்கள் இருந்து வெளியேறலாம்.
உத்திரம், உத்திராடம் மற்றும் கார்த்திகை நட்சத்திர நபர்கள் உபயோகித்து வழிகாட்டுதல் பெறலாம்.
Credit: மணிகண்டன் பாரதிதாசன்